Agaya Gangai

பல்லவி

ஆகாய கங்கை கடல் சேருமா
மூடாத கண்கள் கனாக் காணுமா
வானில் நீலமாய் பூவில் வாசமாய்
எந்தன் வாழ்விலே வந்த நேசம் நீயடி
என் வீட்டில் மீண்டும் உன் வாசம் வீசவே
உன் பாதை மீது என் பாதம் பதித்தேன்
நீரின்றி மீனா நீயின்றி நானா
தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

சரணம் 1

யார் யாரோ என்னோடு
என் மனமோ உன்னோடு
வேறாரும் பார்க்காமல்
வேர்க்கின்றேன் கண்ணோடு
ஓ ... அன்பே , தனித்தே தவித்தேன்
என் சுவாசக்காற்றில் உன் வாசம் சேர்க்க
எங்கே உனை தேட ...
நீரின்றி மீனா நீயின்றி நானா
தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

சரணம் 2
தொலைதூரம் நீ போக
திசை தேடி நான் வாட
கரை சேரக் கேட்கின்றேன்
விண்மீனே வழிகாட்டு
ஏ... பெண்ணே , அலைந்தேன் தொலைந்தேன்
கரைவந்த போதும் தொடர்வேனே உன்னை
உயிர் கொண்ட தேடலடி ...ஹே...
நீரின்றி மீனா நீயின்றி நானா
தீப்பற்றும் நெஞ்சை எனை அணைத்தே அணைத்திட வா

(ஆகாய கங்கை கடல் சேருமா)
Log in or signup to leave a comment

NEXT ARTICLE